பொருளடக்கம்
- அறிமுகம்
- ஏற்றுமதி இறக்குமதி என்றால் என்ன?
- விவரம் அறியுங்கள்!
- இந்தியாவில் ஏற்றுமதி தொழிலைத் தொடங்குவது எப்படி?
- தீர ஆராய்தல்
- தொழிலைப் பதிவுசெய்தல்
- இந்தியாவில் ஏற்றுமதி தொழில் தொடங்குவதற்கு தேவையானவை
- ஆவணங்கள்
- தொழில் யுக்திகள்
- சரக்கு போக்குவரத்து அம்சங்கள்
- சிறிய அளவிலான ஏற்றுமதி நிறுவனம் அமைக்க எவ்வளவு செலவு ஆகும்?
- ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களை வாங்குபவர்களைக் கண்டறிவது எப்படி?
- வணிக கண்காட்சிகளில் பங்குபெறுதல்
- இணைய சந்தைகளைப் பயன்படுத்துதல்
- விளம்பரப்படுத்துதல்
- வெளிநாட்டு இறக்குமதி நிறுவனங்களின் தொடர்பு
- மொத்த வியாபாரம் (Wholesale) செய்பவர்களுடன் இணைதல்
- விற்பனை பிரதிநிதி
- இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்வதன் மூலம் இலாபம் தரும் பொருட்கள்
- முடிவுரை
அறிமுகம்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 20% ஆனது ஏற்றுமதி இறக்குமதி தொழிலால் கிடைக்கிறது. உலகளாவிய பொருளாதார சரிவு இருப்பினும், இந்தியாவின் ஏற்றுமதி சந்தை கடந்த சில வருடங்களாகவே நிலையாக இருந்து வருகிறது.
இந்திய கலாச்சாரத்தைச் சேர்ந்த மற்றும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஏராளமாகவும், பன்முக தன்மை கொண்டவையாகவும் உள்ளன. உலக சந்தையில் நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை சந்தைப்படுத்துதல் நல்ல வரவேற்பைப் பெறும். இத்தகைய ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் நாட்டின் வருமானம் உயரும்.
ஆதலால் தான் இந்தியாவில் ஏற்றுமதி தொழில் தொடங்குவது ஒரு சிறந்த தேர்வாக உள்ளது. எனவே தொழில் தொடங்குவதற்கு முன்னர், ஏற்றுமதி தொழில் குறித்த யோசனைகள், வழிமுறைகள் பற்றி முதலில் காண்போம்.
இந்த தொகுப்பில் முன்னணியில் உள்ள அனைத்து ஏற்றுமதி தொழில்கள் குறித்தும், எவ்வாறு ஏற்றுமதி செய்யும் பொருட்களை வாங்குபவர்களைக் கண்டறிவது உள்ளிட்டவற்றை பற்றியும் விரிவாக காணலாம். வாங்க.
ஏற்றுமதி இறக்குமதி என்றால் என்ன?
பொருட்கள் மற்றும் சேவைகள் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வேறொரு நாட்டில் விற்பனை செய்யப்படுவதே ஏற்றுமதி இறக்குமதி தொழில் ஆகும். தன்னுடைய நாட்டில் உற்பத்தி செய்து பிற நாட்டில் விற்பனை செய்யும் நாடு, ஏற்றுமதி செய்யும் நாடு என அழைக்கப்படுகிறது. பிற நாடுகளில் இருந்து பொருட்கள் மற்றும் சேவைகளை பெறும் நாடு இறக்குமதி செய்யும் நாடு என்று அழைக்கப்படுகிறது.
விற்பனை செய்யும் நாடு, ஏற்றுமதியாளர் என்றும், பொருட்களை வாங்கும் நாடு, இறக்குமதியாளர் என்றும் அழைக்கப்படுகிறது. விற்பனை செய்பவர்கள், நேரடியாகவோ அல்லது இடைத்தரகர்கள் மூலமாகவோ விற்பனை செய்யலாம். நேரடி அந்நிய முதலீடு செய்வதை விட ஏற்றுமதி தொழிலில் குறைந்த அளவே முதலீடு தேவைப்படும்.
விவரம் அறியுங்கள்!
2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியின் மதிப்பு 770.18 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். 2022-23 ஆம் நிதியாண்டில் வணிக பொருட்களின் ஏற்றுமதி மட்டும் 447.46 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனும் புதிய உச்சத்தை அடைந்தது. இது முந்தைய நிதி ஆண்டின் 422 பில்லியன் அமெரிக்க டாலர்களை விட 6.03 சதவிகிதம் அதிகமாகும்.
இந்தியாவில் ஏற்றுமதி தொழிலைத் தொடங்குவது எப்படி?
இந்தியாவில் ஏற்றுமதி தொழிலைத் தொடங்குவது என்பது
மிகவும் எளிதான ஒன்றாகும்.
தீர ஆராய்தல்:
நீங்கள் ஏற்றுமதி செய்ய விரும்பும் பொருள் அல்லது சேவையை முதலில் தீர்மானியுங்கள். சந்தையில் நிலவும் தேவை மற்றும் சந்தைப்படுத்தும் போது கிடைக்கும் வெற்றி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆராய்தல் மிக முக்கியம்.
தொழிலைப் பதிவு செய்தல்:
உங்களது ஏற்றுமதி தொழிலைப் பதிவுசெய்து கொள்ளுங்கள். மேலும் உங்கள் நிறுவனத்திற்கான PAN கார்டினை பதிவுசெய்து பெற்று கொள்ளுங்கள்.
இந்தியாவில் ஏற்றுமதி தொழில் தொடங்குவதற்கு தேவையானவை:
இந்தியாவில் ஏற்றுமதி தொழில் செய்ய தேவையான உரிமங்கள், பதிவுகளையும் பெற வேண்டும். DGFT (Directorate General of Foreign Trade) மற்றும் EPC (Export Promotion Council) ஆகியவற்றிடம் இருந்து உரிமம் பெற வேண்டும். மேலும் நீங்கள் ஏற்றுமதி செய்ய போகும் பொருளைப் பொருத்து அதற்கென்று தனியாக தேவைப்படும் பிற உரிமங்களையும் பெறவேண்டி இருக்கும்.
ஆவணங்கள்:
- வணிக பட்டியல் (Commercial Invoice)
- டெர்மினல் ஹாண்ட்லிங்யினை (Terminal Handling) பெறுதல்
- போக்குவரத்திற்கான விலைப்பட்டியல் (Shipping Invoice)
- கப்பல் அல்லது வான்வழி சரக்கு போக்குவரத்துக்கான ரசீதுகள் (Bills)
- IoR (Importer of Record)
- பேக்கிங் பட்டியல் (Packing list)
- ஆய்வுச்சான்றிதழ் (Certificate of Inspection)
தொழில் யுக்திகள்
நீங்கள் ஏற்றுமதி செய்ய இருக்கும் பொருட்களை வாங்கக்கூடியவர்களைக் கண்டறிந்து அவர்களுடன் நட்புறவை வளர்த்து கொள்ள வேண்டும். பொருட்கள் வாங்குபவர்களை வணிக கண்காட்சி, இணைய சந்தைகள் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ தொடர்பு கொள்ள முடியும்.
பின்னர் உங்களது விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கான யுக்திகளை வகுத்திடுங்கள். இந்த யுக்திகள் என்பது சந்தைப்படுத்துதலுக்கு(Marketing) தேவையான பொருட்கள், வணிக கண்காட்சிகளில் பங்குபெறுதல், நீங்கள் விற்பனை செய்ய விரும்பும் சந்தையில் உள்ள முகவர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் உடன் இணைந்து பணியாற்றுதல் உள்ளிட்டவை அடங்கும்.
சரக்கு போக்குவரத்து அம்சங்கள்
உங்களது பொருட்களை இறக்குமதியாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்தல். சரக்குகளை லாரி, இரயில், கப்பல் அல்லது விமானம் மூலம் விநியோகம் செய்யும் சரக்கு போக்குவரத்து தொழிலில் இருப்பவர்களை வாடகைக்கு அமர்த்தலாம்.
தேவையான சுங்கவரி, பிற ஆவணங்கள், சரக்கு போக்குவரத்து தொடர்புடைய ஆவணங்கள், நீங்கள் சந்தைப்படுத்தும் இடங்களில் உள்ள கட்டுப்பாடுகள் ஆகியன குறித்தும் தெளிவுடன் இருங்கள்.
சிறிய அளவிலான ஏற்றுமதி நிறுவனம் அமைக்க எவ்வளவு செலவு ஆகும்?
தொழில் தொடங்குவதில் முதலீடு என்பது மிகவும் முக்கியமான ஒரு அம்சம் ஆகும். இந்தியாவில் ஏற்றுமதி இறக்குமதி தொழில்துறையில், தொழில் தொடங்க, தொழிலின் அளவு, ஏற்றுமதி செய்யும் பொருளைப் பொருத்து குறைந்தபட்சமாக ஒரு இலட்சம் முதல் மூன்று இலட்சம் வரை தேவைப்படும். இந்த தொகையானது தொழில் தொடங்குவதற்கான செலவுகள், சட்டரீதியான மற்றும் பதிவுகள் தொடர்பான கட்டணங்கள், மூலதன செலவுகள் உள்ளிட்ட பலவித செலவுகளுக்கு தேவைப்படும்.
வங்கிக்கடன், ஏற்றுமதி தொழிலை ஊக்குவிக்கும் வகையிலான அரசாங்க நிதியுதவி திட்டங்கள் மூலமாகவோ அல்லது உங்களது தனிப்பட்ட நிதியினை கொண்டும் உங்களது ஏற்றுமதி தொழிலுக்கான முதலீட்டினை பெற முடியும்.
ஏற்றுமதி தொழில் தொடங்குவதற்கான செயல்முறைகள் சற்று நீண்டது என்ற போதிலும், அடுத்த 10 ஆண்டுகளுக்கு இத்தொழிலில் நல்ல ஏற்றம் இருக்கும். ஆதலால் ஏற்றுமதி தொழிலில் முதலீடு செய்வது என்பது மிகவும் பலனளிக்கக்கூடிய ஒன்றாகும்.
ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களை வாங்குபவர்களைக் கண்டறிவது எப்படி?
ஏற்றுமதி தொழில் நிறுவனத்தை நிறுவிய பின்னர், அடுத்தக்கட்ட முக்கியமான வேலை உங்களது பொருட்களை விற்பனை செய்வது தான். அதற்கு நீங்கள் ஏற்றுமதி செய்யும் பொருட்களை வாங்கக்கூடியவர்களைக் கண்டறிய வேண்டும். எப்படி கண்டறிவது என பார்க்கலாம். வாங்க.
- வணிக கண்காட்சிகளில் பங்குபெறுதல்
சிறு மற்றும் பெரிய அளவிலான ஏற்றுமதி தொழில் செய்பவர்கள் இணைந்து தாங்கள் ஏற்றுமதி செய்யும் பொருட்களை காட்சிப்படுத்த கண்காட்சிகள் அமைப்பர். அதில் பங்குபெறுவதன் மூலம் வெளிநாட்டில் இருந்து வரும் பொருள்கள் வாங்குபவர்களைக் அல்லது இறக்குமதி செய்பாவர்களைக் காணவும், நட்புறவு ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும்.
- இணைய சந்தைகளைப் பயன்படுத்துதல்
உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலானோர் தங்களுக்கு தேவையான பொருள்கள் வாங்குவதற்கு இணைய விற்பனை தளங்களையே பெரிதும் பயன்படுத்துகின்றனர். அவ்வகையில் அமேசான், பிளிப்கார்ட் போன்றவை நம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான இணைய சந்தையாக உள்ளன. இணைய சந்தைகள் உங்களது பொருட்களை வெளிநாட்டு சந்தைகளில் விற்க மிகவும் ஓர் அற்புதமான வழியாக உள்ளன.
- விளம்பரப்படுத்துதல்
விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர்வதும், பெறுவதும் எந்தவொரு தொழிலுக்குமான தேவையான ஒன்று. இன்றைய டிஜிட்டல் உலகில் எளிதாக இணையம் மூலம் உங்களது போஸ்டர்களை காட்சிப்படுத்த முடியும். Google ads, Instagram, YouTube மூலம் பலகோடி மக்களிடையே உங்களது விளம்பரங்களை குறைந்த செலவில் காட்சிப்படுத்த முடியும்.
- வெளிநாட்டு இறக்குமதி நிறுவனங்களின் தொடர்பு
உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஒவ்வொரு நாட்டிலும் இறக்குமதி செய்யும் தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்களுடன் இணைந்தும் உங்களது ஏற்றுமதி தொழிலினை செய்யலாம்.
- மொத்த வியாபாரம் (Wholesale) செய்பவர்களுடன் இணைதல்
மொத்தமாக கொள்முதல் செய்து பின், சிறு பெரு விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகள், பிற உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோர்களுடன் இணைந்து செயல்படலாம்.
- விற்பனை பிரதிநிதி
வெளிநாட்டில் உங்களது பொருட்களை விற்று தரக்கூடிய விற்பனை பிரதிநிதியினை ஏற்படுத்தி கொள்ளுதல், மிகவும் சிறந்த யுக்தியாகும். ஏனெனில் வெளிநாட்டில் மொத்த வியாபாரிகளைக் கண்டறிவது சிரமம். ஆனால் விற்பனை பிரதிநிதிகள், நீங்கள் ஏற்றுமதி செய்யும் நாட்டில் வாடிக்கையாளர்களைக் கண்டறிந்து, தரகு(Commission) அடிப்படையில் வேலை செய்து கொடுப்பார்கள்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்வதன் மூலம் இலாபம் தரும் பொருட்கள்
நகைகள்: உலக அளவிலான ஆடம்பர சந்தையில் அதிக இலாபம் ஈட்டக்கூடிய ஒன்றாகும். தரம் மற்றும் நம்பக தன்மைக்கான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படும்.
மருந்துகள்: மருத்துவத்துறையில் அதிகம் இலாபம் ஈட்டக்கூடிய பொருட்களாகும். ஆனால் கண்டிப்பாக தர நெறிமுறைகளைக் கடைபிடித்து இருக்க வேண்டும்.
டீ மற்றும் காபி: தரம் சார்ந்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, உலக அளவில் பானங்கள் துறையில் அதிக இலாபம் தரவல்லது.
ஐடி மற்றும் மென்பொருள் சேவைகள் (IT & Software Services):
உலக மென்பொருள் சந்தையில் தகவல்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்யும் பட்சத்தில் இவற்றின் மூலம் அதிக அளவில் இலாபம் ஈட்ட முடியும்.
மசாலா பொருட்கள்: உணவு பாதுகாப்புக்கான தரசோதனைகளுக்கு உட்படுத்தப்படும். உலக அளவில் உணவுத்துறையில் பெரும் வருமானம் கிடைக்கக்கூடிய ஓர் பொருளாகும்.
பழங்கள் மற்றும் காய்கறிகள்: இயற்கை உரங்கள் அல்லது செயற்கை உரங்கள் கொண்டு தயார்செய்யப்பட்டவையா என்பதை பொருத்து, விலை மற்றும் இலாபம் ஆனது மிதமானது முதல் அதிக அளவிலும் கிடைக்கும்.
பருத்தி மற்றும் நூல்: இவற்றிற்கான தரச்சான்றுகள் உடன் உலக ஜவுளித்துறை சந்தையில் மிதமானது முதல் அதிக அளவிலான இலாபம் ஈட்டலாம்.
அரிசி: தரத்திற்கான சான்றுகள் தேவைப்படும். மிதமானது முதல் அதிக இலாபம் ஈட்டக்கூடியது.
ஆயுர்வேத மற்றும் மூலிகை தயாரிப்புகள்:
ஆரோக்கியம் சார்ந்த கட்டுப்பாடுகள் பூர்த்தியாகும் நிலையில் உலக சந்தையில் அதிக அளவிலும், மிதமான நிலையிலும் இலாபம் தரவல்லது.
தேக்கு மற்றும் மரச்சாமான்கள்: தரத்தை நிர்ணயிக்கும் தரநிலைகள் அனைத்தும் பூர்த்தி செய்யும் பொழுது, மிதமான அளவிலும், அதிகப்படியாகவும் இலாபம் பார்க்கலாம்.
ஆட்டோமொபைல் பாகங்கள்: தரம் மற்றும் பாதுகாப்பு தரநிலைகள் பூர்த்தியாகும் பட்சத்தில் ஏற்றுமதி செய்து மிதமானது முதல் அதிக லாபம் பார்க்கலாம்.
ஆடைகள் மற்றும் ஜவுளி: ஃபேஷன் துறையில் ஜவுளி பொருட்களுக்கான தரநிலைகள் கொண்ட ஆடைகள் அதிக இலாபமும், குறிப்பிடத்தக்க வகையிலும் இலாபம் ஈட்டி தரும்.
கைவினைப்பொருட்கள்: கலைப்பொருட்கள் சார்ந்த துறையில் தனித்துவமான வடிவமைப்புகள் மற்றும் கைவினைத்திறன் கொண்ட பொருட்கள் நடுத்தர மற்றும் அதிக அளவிலும் இலாபம் தரக்கூடியவை.
பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள்: பேக்கேஜிங் மற்றும் லேபிளிங் (Packaging & Labeling) விதிமுறைகள் பின்பற்றப்பட்டு இருக்க வேண்டும். உணவுத்துறையில் குறிப்பிடும் வகையிலும் அதிகப்படியான இலாபமும் ஈட்டி தரக்கூடியவை இந்த பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள்.
லெதர் பொருட்கள்: தரநிலைகள் நன்றாக இருக்கும் பட்சத்தில் நடுத்தர மற்றும் அதிக இலாபம் தரக்கூடியவை.
பொறியியல் பொருட்கள் (Engineering Goods): இப்பொருட்கள் தொழில்நுட்ப பொருட்களுக்கான தரநிலைகள் கொண்டு இருக்க வேண்டும். மிதமானது முதல் அதிக அளவிலான இலாபம் ஈட்டலாம்.
ஆர்கானிக் பொருட்கள்: ஆர்கானிக் பொருட்களுக்கான சான்றிதழ்கள் பெற்று இருக்க வேண்டும். நடுத்தர மற்றும் அதிகப்படியான இலாபமும் இவற்றின் மூலம் பெற முடியும்.
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்கள்: குறிப்பிடத்தக்க வகையிலும், அதிக இலாபமும் ஈட்டக்கூடிய இப்பொருட்கள் தொழில்நுட்பம் சார்ந்த தரநிலைகள் பெற்று இருக்க வேண்டும்.
கிரானைட் மற்றும் மார்பிள்: இத்தொழில் சார்ந்த தரநிலைகள் பெற்று உள்ள கிரானைட் மற்றும் மார்பிள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் மிதமானது முதல் அதிக அளவிலான இலாபம் பார்க்கலாம்.
கடல் உணவு: கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் போது, கடல் உணவுகளுக்கான தரநிலைகள் பூர்த்தி செய்யப்பட்டு இருக்க வேண்டும். குறிப்பிடும் வகையிலும் அதிகப்படியான இலாபமும் கடல் உணவுகள் மூலம் பெறலாம்.
முடிவுரை
ஏற்றுமதி தொழில் இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் ஓர் துறையாகும். மேலும் இந்தியாவில் ஏற்றுமதி தொழில் தொடங்குவதற்கான சூழல் நன்றாக உள்ளது. ஏற்றுமதி தொழிலை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கத்திடம் இருந்து நிதி உதவிகள் கிடைக்கின்றன. ஆதலால் சிறிய முதலீட்டில் அதிக இலாபம் பெறும் ஓர் தொழிலாக ஏற்றுமதி தொழில் உள்ளது.