எளிதாகத் தொழிலதிபர் ஆகலாம்..


பள்ளிக் கல்வி. கல்லூரிக் கல்வி முடித்த பலருக்கும் பல விதமான ஆசைகள், கனவுகள் நிச்சயம் பஇருக்கும். சிலர் பொறியியல் துறையைத் தேர்வுசெய்வர். சிலர் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக வாய்ப்புகள் உள்ளதென்று அதைத் தேர்வுசெய்வர். சிலருக்கு அரசு, வங்கி வேலைகளில் நாட்டமிருக்கும். மற்றவர்களிலிருந்து தனித்து சாதிக்க நினைக்க விரும்புவோரும் உண்டு. இவர்கள் தங்களது தனித் திறமையை நிரூபித்துப் பார்க்க ஆசைப்படு வோர். மற்றவரிடம் வேலை செய்வதைவிடத் தன்னால் 10 பேருக்கு வேலை தர முடியும் என்ற சிந்தனை மேலோங்கி காணப்படும். இத்தகையோர்தான் தொழில் முனைவோராக உருவாகின்றனர். அரசு, வங்கி, தனியார் துறையில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு தர முடியாத சூழலில் இத்தகைய சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களை ஊக்குளிக்க அரசு பல்வேறு சலுகைகளையும், கடன் உதவித் திட்டங்களையும் அளிக்கிறது.

முன்பெல்லாம் தனியாகத் தொழில் தொடங்க வேண்டுமென்றால் அதற்கு முதலீடு அவசியம். அவ்விதம் முதலீட்டைத் திரட்ட முடியாதவர்கள் தங்களது லட்சியங்களை முடக்கி, வேலை தேடும் படலத்தில் இணைந்துவிடுகின்றனர். ஆனால், இப்போதைய சூழலில் ஆர்வமும், திறமையும் உள்ள இளைஞர்களை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை மாநில அரசு மட்டுமின்றி ஒன்றிய அரசும் அளிக்கிறது. இத்தகைய திட்டங்களைப் பற்றி நன்கு புரிந்துகொண்டால் அதில் தங்கள் தொழிலுக்குத் தேவையான கடன் திட்டத்தைத் தேர்வுசெய்து தொழில்முனைவோராகப் பிரகாசிக்கலாம்.

பிரதமர் வேலைவாய்ப்புத் திட்டம்

பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்க (PMEGP) திட்டத்தின்கீழ் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்குக்கூட ரூ. 25 லட்சம் வரை கடன் அளிக்கப்படுகிறது. தொழில்துறையாக இருப்பின் ரூ. 25 லட்சமும், சேவை சார்ந்த தொழிலுக்கு ரூ. 10 லட்சம் வரையிலும் கடன் அளிக்கப்படுகிறது. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு உற்பத்தித் துறை சார்ந்த தொழிலுக்கு ரூ. 10 லட்சமும், சேவை சார்ந்த தொழிலுக்கு ரூ. 5 லட்சமும் கடனாக வழங்கப்படுகிறது. கடன் பெறுவதற்குக் குறைந்தபட்ச வயது 18, உச்சபட்ச வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை.

இப்பிரிவில் கடன் பெறுபவர்களுக்குக் கடன் தொகையில் நகர்ப்பகுதியில் உள்ளவர்களுக்கு 15 சீதவீதமும், கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு 25 சதவீதம் வரையிலும் மானியம் வழங்கப்படுகிறது Village Business Ideas in Tamil. தொழிலுக்கான மொத்த முதலீட்டில் 10 சதவீதம் மார்ஜின் தொகையைத் தொழில்முனைவோர் தங்களது பங்களிப்பாகச் செலுத்த வேண்டும்.

பட்டியலினத்தவர். பிற்படுத்தப்பட்டோர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், மகளிர். முன்னாள் படைவீரர்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோருக்கு 25 *தவீதமும், கிராமப்பகுதியில் உள்ளவர்களுக்கு 35 சதவீதம் வரையிலும் மானியம் அளிக்கப்படுகிறது.

கடன் விண்ணப்பங்களை www.kvicorine.gov.in/pmegp என்னும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்

  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆதார் அட்டை
  • தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கை, ஜிஎஸ்டியுடன் சேர்ந்த மதிப்பீடு
  • சாதிச் சான்றிதழ் * கல்விச் சான்றிதழ்
  • கிராமப்பகுதியாக இருப்பின் கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சித் தலைவர் அல்லது செயலரிடமிருந்து பெறப்பட்ட மக்கள்தொகைச் சரன்று.
  • மாற்றுத்திறனணியாக இருப்பின் அதற்குரிய அடையாள அட்டை
  • வங்கிக் கணக்குப் புத்தகம்

தொழில்முனைவோர் வளர்ச்சிக்கான பயிற்சியைக் கடன் பெறுவோர் கட்டாயம் மேற்கொண்டிருக்க வேண்டும். இந்தப் பயிற்சியைக் கடன் பெற்ற ஓராண்டிற்குள் நிறைவு செய்திருக்க வேண்டும்.

புதிய தொழில்முனைவோர் திட்டம்

NEEDS எனும் இத்திட்டம் முதல் தலைமுறை தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது. பெருந்தொழில் நிறுவனங்களுடன் பரிச்சயம் ஏற்படுத்துவது, பயிற்சி அளிப்பது. வணிகத் திட்டங்களை வகுக்க உதவுவது, தொழில் தொடங்க ஆயத்தம் செய்வது ஆகிய அனைத்துப் பணிகளும் இத்திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படுகின்றன. 21 வயது நிரம்பியவர்கள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம். அதிகபட்ச வயது வரம்பு 35. கல்வித் தகுதியாகப் பட்டப் படிப்பு பட்டயப் படிப்பு மற்றும் தொழில் பயிற்சி (ஐடிஐ) உள்ளிட்டவை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சம் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 5 கோடி வரை இத்திட்டத்தின்கீழ் கடனுதவி பெற முடியும். தொழில் தொடங்குவதற்கான இடம், கட்டடம், இயந்திரங்களுக்கு முதலீடு செய்ய கடனுதவி அகிழங்கப்படுகிறது. பொதுப் பிரிவினர் திட்ட முதலீட்டில் 10 சதவீதமும், சிறப்புப் பிரிவினர் முதலீட்டில் 5 சதவீதமும் தங்கசாது பங்களிப்பாக முதலீடு செய்ய வேண்டும். இத்திட்டத்தில் அதிகபட்ச மானியம் ரூ.50 லட்சமாகும். வட்டி மானியமும் அளிக்கப்படுகிறது. செய்வது ஆகிய இத்திட்டத்தின்கீழ் கடனுதவி பெற விரும்புவோர் விண்ணப்பங்களை www.msmeonline.gov.n/nescx என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான திட்டம்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டமாக UYEGP செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க விரும்புவோர் குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பு 35 ஆகவும், சிறப்புப் பிரிவினருக்கு 45 ஆகவும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உற்பத்தித் தொழிலுக்கு அதிகபட்ச முதலீட்டு தொகை ரூ. 15 லட்சமும், சேவைத் தொழிலுக்கு ரூ. 5 லட்சம் வரையிலும் கடன் அளிக்கப்படும். பயனாளிகளுக்குத் தமிழ்நாடு அரசு 25 சதவீதம் மானியம் அளிக்கிறது. அதிகபட்சம் ரூ. 2,50,000 வரை மானியம் அளிக்கப்படுகிறது. இக்கடன் பெறுவதற்குச் சொத்து பிணையம் தேவையில்லை. இத்திட்டத்தின்கீழ் தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

தேவையான ஆவணங்கள்

  • கல்விச் சான்றிதழ்
  • ஆதார் அட்டை
  • குடும்ப அட்டை
  • சாதிச் சான்றிதழ்
  • திட்ட அறிக்கை மதிப்பீடு
  • திட்ட அறிக்கை தொகை

ஆகியவற்றின் நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

ஆயத்த அடைகள் தயாரித்தல், ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட 58 வகையான தொழில்களுக்கு இத்திட்டத்தின்கீழ் கடன் அளிக்கப்படுகிறது. தாங்கள் தொடங்கும் தொழில் இந்தத் தொழில் பிரிவில் உள்ளதா என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப தேர்வுசெய்வது உரிய பலனை அளிக்கும்.

தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம்

சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குச் சிரமமின்றிக் கடன் கிடைப்பதற்காகத் தமிழக அரசு உருவாக்கியுள்ள கடன் உறுதித் திட்டமாகும். இதன் மூலம் ரூ. 40 லட்சம் வரை கடன் பெறலாம். ஏற்கெனவே தொழில் தொடங்கி அதற்குக் கூடுதலாக முதலீடு தேவைப்படும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தின்கீழ் கடன் பெறலாம். இத்திட்டத்தின்கீழ் கடன் வழங்க பட்ஜெட்டில் ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து தொழிலை நடத்துவதற்குப் போதிய நிதிக் கையிருப்பு மிகவும் அவசியமாகிறது. பொருள்களை கம்பத்தி செய்து அதை விற்பனையாளருக்கு விநியோகித்த பிறகு, அவரிடமிருந்து பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்போது, பணப் புழக்கம் முடங்கித் தொடர்ந்து தொழிலை நடத்த முடியாத சூழல் ஏற்படும். அதுபோன்ற சமயங்களில் தொழிலைத் தொடர்ந்து நடத்த இந்த உத்தரவாதக் கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்த 24 மணி நேரத்திலேயே கடன் வழங்க 3 வங்கிகள் முன்வந்துள்ளன.

Recent Posts